பல்லி கடித்து ஒருவர் மரணம்.. 2 பல்லிகளை வீட்டில் வைத்து வளர்த்து வந்ததால் விபரீதம்!

 
அசுர பல்லி

Gila Monsters இனத்தைச் சேர்ந்த பல்லிகள் தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை தாயகமாகக் கொண்டவை. 2 அடி வரை வளரக்கூடிய இந்த பல்லிகள், அவற்றின் அழகுக்காகவும், தோலின் வடிவ நிறத்திற்காகவும் மதிக்கப்படுகின்றன. இந்நிலையில், கொலராடோவில் வசித்து வந்த கிறிஸ்டோபர் வார்டு (வயது 52) என்பவர் 2 கிலோ எடையுள்ள அசுர பல்லிகளை வளர்த்து வந்துள்ளார்.

அந்த பல்லி ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் அவரை 4 நிமிடங்கள் கடித்துள்ளது. விரைவில் அவருக்கு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியது. பலமுறை வாந்தி எடுத்துள்ளார். சுவாசமும் நின்று போனது.இதன் விளைவாக, அவர் 2 மணி நேரம் வரை சுயநினைவின்றி இருந்துள்ளார். அவரது காதலி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, வார்டின் காதலி பயந்து போய் 2 பல்லிகளையும் விலங்குகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். வார்டின் கூண்டில் இருந்த 26 வகையான சிலந்திகள் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பல்லிகள் விஷமுள்ள ஊர்வன. அவை கடித்தால் வலி ஏற்படலாம். ஆனால் கொல்லும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இதற்கு முன், 1930ல், இந்த வகை பல்லி கடித்து ஒருவர் இறந்தார். அதன் பிறகே அரிசோனா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் டேல் டினார்டோ தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web