வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி - நாகப்பட்டினத்தில் சோகம்!

 
சுவர் இடிந்து விழுந்து

நாகப்பட்டினம் அருகே வீட்டின் பராமரிப்புப் பணியின் போது எதிர்பாராதவிதமாகக் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி சங்கர் என்ற கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியில் உள்ள முகமது கனிபா என்பவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணியில் பணகுடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற கூலித் தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அவர் ஹேமர் ட்ரில் இயந்திரம் மூலம் கான்கிரீட் கூரையைத் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் கான்கிரீட் கூரை பெயர்ந்து இடிந்து விழுந்தது. இதில் கூரையோடு சேர்த்து சங்கரும் கீழே விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

பள்ளி மானவி தற்கொலை

விபத்து குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வரத் தாமதமானதால், அங்கிருந்த சக தொழிலாளர்களும் பகுதி பொதுமக்களும் சேர்ந்து இடிபாடுகளை அகற்றிச் சங்கரை மீட்டனர்.

மீட்புக் குழுவினர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.