இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

 
இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை அடுத்து கருப்பு, வெள்ளை, மஞ்சள் என விதவிதமான வண்ணங்களில் பூஞ்சை நோயும் பரவி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதான நபர் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் குறையாததால் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின்தலைவர் டாக்டர் ரவி தோசி சந்தேகத்தின் பேரில் கருப்பு பூஞ்சை சோதனை செய்துள்ளார்.

அந்த சோதனையின் முடிவில் 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மேலும் அந்த நபருக்கு பச்சை பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு. இதனை தொடர்ந்து அவரை மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

From around the web