உக்ரைனில் இந்தியருக்கு சொந்தமான மருந்து குடோன் மீது ரஷ்யா தாக்குதல் - ஒருவர் பலி!

 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான மருந்துப் பொருட்கள் குடோன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உக்ரைனின் சுமி நகரில் செயல்பட்டு வந்த மருந்துப் பொருட்கள் குடோன் மீது ரஷ்யா நேற்று கடுமையான டிரோன் தாக்குதலை நடத்தியது. தாக்கப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள் குடோன் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலின் போது குடோனில் பணியில் இருந்த 52 வயதான ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரஷ்யா ட்ரோன் உக்ரைன்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், இதுபோன்ற தாக்குதல்களால் வணிக வளாகங்கள் மற்றும் வெளிநாட்டினரின் சொத்துக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.