ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யத் திட்டம்!
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் சுமையைக் குறைக்க தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யத் கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
தற்போது வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மூலம் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாபெட் அமைப்பு மூலமாக முதல் கட்டமாக 70,000 கிலோ வெங்காயத்தைப் பெற்று விநியோகிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு ஸ்டாக் வந்தடைந்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
