யோகா, இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஜூலை 31 கடைசி தேதி!

 
மருத்துவ படிப்பு ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். எனப்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பைத் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய மாணவ-மாணவிகள் இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மேல்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துத் தேர்ச்சி பெற்ற  தகுதியான மாணவர்கள் இப்பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இக்கல்வியாண்டு சேர்க்கைக்கான விரிவான தகவல் தொகுப்பேடு, கட்டண விபரங்கள் மற்றும் தகுதிக்கான வழிகாட்டுதல்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுந்த கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களுடன் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவர்கள் மருத்துவர் டாக்டர்

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற சூலை 31-ம் தேதிக்குள் இணையவழியாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க www.tnayushselection.org என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம் எனத் தேர்வுக் குழுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாகப் பொதுமக்களிடையே மாற்று மருத்துவம் மற்றும் யோகா, இயற்கை வாழ்வியல் முறைகள் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேரத் தமிழக மாணவ-மாணவிகளிடையே  வரவேற்பும், கடும் போட்டியும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.