ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்.. இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், சுலபமான முறையில் ஆன்லைன் வழியிலேயே பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இனி மனை அல்லது வீடு வாங்குவோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. கட்டுமான நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்தபடியே நேரடியாக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் வழங்கப்படும் விற்பனை ஆவணங்களையும் இந்த ஆன்லைன் முறை வழியே எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.
வங்கிக் கடன்களுக்கான அடமான ஆவணங்கள் மற்றும் கடன் அடைப்பு தொடர்பான ரசீது ஆவணங்களையும் இனி ஆன்லைன் முறையிலேயே விரைவாகப் பதிவு செய்யலாம். இப்புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படுவதால் தேவையில்லாத காலதாமதம் தவிர்க்கப்பட்டு, சேவை வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் கிடைக்கும்.
