“ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு புதிய விதிகள்! 2027 முதல் என்னென்ன மாற்றம்?”

 
ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. மத்திய அரசு, நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020-ல் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. புதிய Consumer Protection (E-Commerce) (Amendment) Rules, 2026, 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் தளங்களில் ஒரு பொருளுக்கு தள்ளுபடி அறிவிக்கும்போது, தற்போதைய குறைக்கப்பட்ட விலையுடன் அதன் ‘Prior Price’-ஐயும் குறிப்பிட வேண்டும்.

அதாவது, தள்ளுபடி அறிவிப்பதற்கு முந்தைய 30 நாட்களில் அந்தப் பொருள் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ‘Prior Price’ என கணக்கிடப்படும். இதன் மூலம் போலியான அல்லது குழப்பம் ஏற்படுத்தும் தள்ளுபடி விளம்பரங்களை கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளைத் தேடும்போது, தேடலுடன் தொடர்பில்லாத வகையில் முடிவுகளை மாற்றி அமைப்பது அல்லது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் search results-ஐ கையாளுவது தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், Sponsored Products அல்லது விளம்பரமாக முன்னிலைப்படுத்தப்படும் பொருட்கள் தெளிவாக ‘Sponsored’ என அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

Online shopping rules to tighten from January 1, 2027: Here's what sellers can no longer hide - IBTimes India

நுகர்வோரை குழப்பி அல்லது அவர்களின் முடிவை மறைமுகமாக மாற்றும் Dark Patterns நடைமுறைகளுக்கு புதிய விதிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களது தளத்தை சுய தணிக்கை செய்து, Dark Patterns விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான இணக்கச் சான்றிதழையும் தளத்தில் காட்ட வேண்டும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாட்டின் பெயர், இறக்குமதியாளர் விவரங்கள், பொருட்களின் Return, Refund, Warranty, Delivery உள்ளிட்ட தகவல்களையும் தெளிவாக வழங்க வேண்டும்.இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதால், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நுகர்வோர் இனி பொருட்களின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை ஒப்பிட்டு பார்க்க கூடுதல் தகவல்களைப் பெற முடியும்.