தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் சப்ளை... கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது!

 
போதை மாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில், ஆன்லைன் வழியாகப் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விநியோகித்த கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதை ஊசி

தஞ்சாவூரைச் சேர்ந்த பிரஜேஷ் (19) என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், செம்பனார்கோவில் பகுதிக்குக் கூரியர் மூலம் அந்த மாத்திரைகள் வந்தபோது, ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பிரஜேஷ் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

போதை ஊசிகள்

போலீசார் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், ஹரி பிரசன்னா, யஷ்வந்த் மற்றும் வீரநாதன் ஆகிய மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். நண்பர்களுக்கு ஆன்லைன் கூரியர் மூலமாகப் போதை மாத்திரைகளை அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.