வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் டிக்கெட் முறை... பொதுமக்கள் கடும் அதிருப்தி.. ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம்!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!
 


சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளுடன் குடும்பத்தினராக பொழுதுபோக்கவும், குழந்தைகளுக்கு வன விலங்குகள் குறித்து அறிமுகப்படுத்தவும் மக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள். 

இந்த உயிரியல் பூங்காவிற்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கை வந்து செல்கிறார்கள். இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆன்லைன் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது பொதுமக்களிடையேயும், சுற்றுலா பயணிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. 

வண்டலூர்

வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், அங்குள்ள கியூ– ஆர் கோடை ஸ்கேன் செய்து பெரியவர்கள் எத்தனை பேர் சிறியவர்கள் எத்தனை பேர் என்பதை தங்களது செல்போனில் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அதற்கான கட்டணத்தை ஜிபே, பேடிஎம் மூலம் செலுத்த வேண்டும். இப்படி செயலி மூலமாக பணம் செலுத்தியவுடன், பூங்காவிற்குள் நுழைவதற்கான டிக்கெட், பார்வையாளர்களின் வாட்ஸ் அப்பில் வந்துவிடும். அந்த டிக்கெட்டை நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்துவிட்டு பூங்காவிற்குள்ளே செல்லலாம்.

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது! 

இந்த புதிய முறையால் வாட்ஸ் அப், ஜிபே போன்ற வசதி இல்லாதவர்களும், செல்போன் இல்லாமல் பூங்காவிற்கு வருபவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

தொழில்நுட்பம் மக்களின் தேவைகளை எளிமையாக்குவதற்காக தான் என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் மக்களை சிரமப்படுத்துவதற்காகவே இப்படியான உத்தரவுகளை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று வயதானவர்களும், இன்று குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுடன் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்பவர்களும் புலம்புவதைக் கேட்க முடிந்தது.

From around the web