சார்பதிவாளர் அலுவலகம் செல்லத் தேவையில்லை... ஆன்லைன் மூலம் ஆவணப் பதிவு செய்ய புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 
சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறையில் பொதுமக்களின் வசதிக்காகக் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வருகை இல்லா ஆவணப் பதிவு முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான புதிய விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமல் தங்களின் இருப்பிடத்தில் இருந்தபடியே ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரம்

இந்த எளிய இணையவழி திட்டத்தின் கீழ் முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் ஆகியவற்றை எளிதாகப் பதிவு செய்ய முடியும். மேலும் வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்களையும் இந்த புதிய இணையதளப் பதிவு முறையைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தே சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் ஆவணப் பதிவு வேலைகளை எவ்வித அலைச்சலும் இன்றி மிக விரைவாகச் செய்து முடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் கணக்கைத் தொடங்கி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய இணையவழி சேவை ஆவணப் பதிவு முறையை எளிதாக்குவதோடு ஒட்டுமொத்தப் பதிவுத் துறையின் செயல்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.