இன்று முதல்வர் விஜய் தேர்தல் பரப்புரை - 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி, புதிய கட்டுப்பாடுகள்!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரவிருக்கும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் நாளை தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார். இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள சூழலில், தலைவர்களின் பிரசாரம் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் வெற்றிபெறத் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து முக்கியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தீவிரமான வீதிவீதியான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
