சட்டப்பேரவையில் சண்டை மட்டுமே நடக்கிறது - பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்!

 
பிரேமலதா

சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, உறுப்பினர்கள் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு சண்டையிடுவதில் மட்டுமே குறியாக இருப்பதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த 10 நாட்களாக மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்களைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.

பிரேமலதா

மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் பேசுவதற்காகவே சட்டமன்றம் இயங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் இரவும் பகலுமாகத் தேர்வுக்குத் தயாராவது போல் வந்து அமர்ந்தாலும், பேசுவதற்கு உரிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகத் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளில் மக்கள் நலப் பணிகளுக்குப் பதிலாகத் தொடர்ச்சியான மோதல்களும் வாதப் பிரதிவாதங்களும் அதிகரித்து வருவது குறித்துக் கூட்டணிக் கட்சித் தலைவரே வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.