அச்சச்சோ... டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு... மத்திய சுகாதார அமைச்சர் அவசர ஆலோசனை!

 
பெங்களூரு எச்1 என் 1 பன்றிக்காய்ச்சல்

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் மொத்தம் 159 பேருக்குப் புதிய இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பதிவாகின. இதில் 114 பேருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, 2026 ஆம் ஆண்டில் டெல்லியில் ஒட்டுமொத்த H1N1 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,777 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 2,602 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பன்றி பன்றிக்காய்ச்சல்

ஒரே நாளில் பாதிப்பு எட்டு மடங்கு வரை அதிகரித்ததை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தயார்நிலை, மருத்துவமனைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள்/பொருட்களின் இருப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.