ப்ச்ச்.. 13 வயசு தான்... பிரபல பைக் ரேஸ் சாம்பியன் பந்தய விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம்!

 
ஸ்ரேயாஸ் ஹரீஷ்

பரிதாபம்... 13 வயசு தான். அத்தனைக் கனவுகளும் நொடிப் பொழுதில் கருகி போனது. நேற்று இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ரேஸ் பந்தயத்தில் கலந்து  கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த13 வயசு இளம் பைக் ரேஸ் சாம்பியன் ஸ்ரேயாஸ் ஹரீஷ், விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஹரீஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில்  வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயம் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரேயாஸ் ஹரீஷ்

எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹரீஷ் திடீரென எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், ஸ்ரேயாஸ் ஹரீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக போட்டிக் குழுவினர் ஸ்ரேயாஸ் ஹரீஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரேயாஸ் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரேயாஸ் ஹரீஷின் திடீர் மரணத்தையடுத்து, பைக் ரேஸ் பந்தயம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web