அச்சச்சோ... பசிபிக் பெருங்கடலில் உருவானது ‘சூப்பர் எல் நினோ’ - வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

 
எல் நினோ

பசிபிக் பெருங்கடலில் நிலவி வரும் எல் நினோ நிகழ்வு தற்போது ‘சூப்பர் எல் நினோ’வாக  தீவிரமடைந்துள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஆகஸ்ட் மாதத்திலேயே 'சூப்பர் எல் நினோ' உருவாவது வரலாற்று பதிவுகளில் இதுவே முதல்முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் இந்த எல் நினோவின் தாக்கம் வரலாற்றில் இல்லாத அளவிற்குப் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை 3.5°C-க்கும் மேல் உயர்த்தக்கூடும் என வானிலை ஆய்வுகள் கணிக்கின்றன.

எல் நினோ

இந்தச் சூப்பர் எல் நினோ வீரியமடைவது உலகளாவிய அளவில் பருவமழை மாற்றங்கள், கடும் வறட்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான புயல் போன்ற தீவிர வானிலை மாறுபாடுகளுக்கு வழியமைக்கும்.

இதன்காரணமாக ஏற்படக்கூடிய சர்வதேச வானிலை தாக்கங்களை வல்லுநர்கள் மற்றும் வானிலை மையங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.