அச்சச்சோ.... அடுத்த வைரஸ் பரவல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்... நிபுணர்கள் எச்சரிக்கை!

 
வைரஸ்

அதுக்குள்ள 4 வருடங்கள் கடந்து போச்சு. உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மார்ச் 11, 2020 அன்று கொரோனா வைரஸ் என்று  அழைக்கப்படும் கோவிட்-19யை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. இன்றைய தேதியில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தாலும், எந்த நேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் உலகளவில் பரவக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் பரவி மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமிருப்பதாக இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. உலகளவில் இன்னொரு வைரஸ் தொற்று பரவ இரண்டு வருடங்கள் ஆகலாம்... நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய் 20 வருடங்கள் கூட ஆககலாம். ஆனால், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு வெகு வேகமாக உலகளவில் இன்னொரு வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகமிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாம் விழிப்புடனும்,  தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று இது குறித்து கூறியிருக்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் தொற்று நோய்களுக்கான மருத்துவ விரிவுரையாளர் டாக்டர் நதாலி மெக்டெர்மாட்.

புவி வெப்பமடைதல் மற்றும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருவது ஆகியவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் பரவும் அபாயத்தை அதிகரித்து வருவதாகௌம் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மரங்களை வெட்டுவதன் மூலம், விலங்குகள் மற்றும் பூச்சிகள் மனித வாழ்விடங்களுக்கு நெருக்கமாக நகர்கின்றன என்று டாக்டர் மெக்டெர்மாட் விளக்குகிறார். 

வைரஸ்

மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், டெங்கு, சிக்குன் குனியா மற்றும் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) போன்ற கொசுக்கள் மற்றும் டிக் பரவும் வைரஸ்களின் வெடிப்புகள் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இதற்கு முன்னர் இது போன்ற பாதிப்புகள் தென்பபடவில்லை என்று கூறுகிறார்.

கோவிட்-19 பெரும்பாலும் வாழ்நாளில் ஒருமுறை நிகழ்வதாகக் குறிப்பிடப்பட்டாலும், உலகளவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், கடைசியாக இதே போன்ற தொற்றுநோய் நாற்பது வருடங்களுக்கு முன்பு தோன்றியது. 1981ல் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி/எய்ட்ஸ், உலகளவில் 36 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன், 1968 இல் ஹாங்காங் காய்ச்சல் தொற்றுநோய் சுமார் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது, மேலும் 1918 இன் ஸ்பானிஷ் காய்ச்சல் 50 மில்லியன் உயிர்களைக் கொன்றது. 

ஆகையால் மக்களே... இன்னொரு தொற்று பரவலுக்கு தயாராக இருங்க... இனியாவது காடுகளைக் காப்போம். மனிதம் வளர்ப்போம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web