அச்சச்சோ... அடுத்த அதிர்ச்சி.... புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்.. உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை!

 
உலக சுகாதார அமைப்பு யு.என்.ஓ.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவின் ஒன்டாரியோ நகரில் கடந்த கடந்த மே மாதம் முதன்முறையாக இந்த புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

'பி.ஜே.2.1' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் வகை, தற்போது வட அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதுடன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளுக்கும் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸின் தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கியக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரத்தம் ரத்த வகை லேப்

இந்த வைரஸ் பரவல் காரணமாகப் பாதிப்புக்கான அடுத்த அலை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா அல்லது தற்போதைய நோய் எதிர்ப்புச் சக்தி இதிலிருந்து பாதுகாக்கப் போதுமானதா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் அறிகுறிகள் சாதாரண இன்ஃப்ளுயன்சா மற்றும் இதர சுவாசத் தொற்றுகளை விடவும் கடுமையான சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா

இந்த வைரஸை உடனடியாகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு முன்னர் பரவிய கொரோனா வகைகளைக் காட்டிலும் இது பன்மடங்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை உறுதிப்படுத்துவதற்கான முழுமையான அறிவியல் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.