அச்சச்சோ... இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

 
அமெரிக்கா இந்தியா இறக்குமதி

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'ரஷியா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் - 2026' எனப் பெயர் மாற்றப்பட்ட இம்மசோதா, அமெரிக்கச் செனட் சபையில் 86 - 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா அமெரிக்கா

ரஷியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது. ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியா

ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் 1996-ஆம் ஆண்டின் சட்டத்தின் காலாவதி தேதியை 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது. செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதா, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது அதன் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.