அச்சச்சோ... என்னடா சொல்றீங்க?! 9 வயசில் மாரடைப்பு... 3ம் வகுப்பு மாணவி திடீர் மரணம்!
இதெல்லாம் நம்பற மாதிரியாவா இருக்கு? என்னடா சொல்றீங்க? என்று மருத்துவர்களைப் பார்த்து கேள்வி கேட்க தோன்றுகிறது. கொரோனா தடுப்பூசி போடுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தார்கள். அதன் பின்னர், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் இனி ரயிலில், விமானத்தில் பயணிக்க முடியும் என்று அச்சுறுத்தினார்கள்.
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உண்மை தான் என்று அதைக் கண்டுபிடித்த இந்திய நிறுவனம் வெளிநாட்டு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சர்ச்சையைக் கிளப்பியது. மனுஷங்களோட உயிரோடு விளையாடுகிற இந்த அரசியல் திரைப்படங்களில் மட்டும் தான் என நினைத்தால் நாம் தான் ஏமாளி. அது திமுகவோ? அதிமுகவோ? பாஜகவோ? காங்கிரஸோ? இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பொதுமக்கள் குறித்து முழுமையாக எல்லாம் கவலைப்பட யாருமில்லை என்பது தானே நிஜமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு 3ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் மான்போர்டு பள்ளி ஒன்றில், 9 வயதே ஆன 3ம் வகுப்பில் படித்து வரும் மான்வி சிங் என்ற மாணவி, சக தோழிகளுடன் பள்ளி வகுப்பறையின் விளையாட்டுப் பாடப் பிரிவு நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நல்ல துடிப்போடும், ஆரோக்கியத்தோடும் விளையாடிக் கொண்டிருந்த மாணவி மான்வி சிங், திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்த நிலையில், உயிரிழந்து விட்டார். விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
