சென்னையில் ஊட்டி... கொடைக்கானல் கொண்டாட்டம்... நாளை பிப்.10ம் தேதி செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!

 
மலர் கண்காட்சி

சென்னையில் தை மாதம் முடிவதற்குள்ளாகவே பல இடங்களில் வெயில் கொளுத்த துவங்கியுள்ளது பொதுமக்களை புலம்ப வைத்துள்ளது. மாலை நேரங்களில் துவங்கி அதிகாலை வரை பனி அதிகரித்துள்ள நிலையில்,  காலை 10 மணிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. தை மாதத்தின் நிலையே இப்படியெனில் இன்னும் சித்திரை.. கத்திரி வெயில் எல்லாம் கொடுமை என அலறுகிறார்கள் பொதுமக்கள்.

இந்நிலையில், சென்னைவாசிகளுக்கு திடீரென ஊட்டி, கொடைக்கானல் சென்று வந்ததைப் போல, சென்னையின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நாளை மலர் கண்காட்சி நடைப்பெற உள்ளது. 

மலர்க்கண்காட்சி

செம்மொழிப் பூங்காவில் அரிய வகை மலர்களான முளரிப்பூ(உரோசா), மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை  என  வாசனை மிக்க மலர்கள் அடங்கிய நறுமணத் தோட்டம் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. இதோடு மூலிகை செடிகளான துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி என உள்ளடக்கி, தனியே மூலிகைத் தோட்டமும் உண்டு. கூடவே போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டமும் பார்வையாளர்களை வசீகரித்து, கண்களுக்கு விருந்து படைக்கும். 

செம்மொழி பூங்கா

விதவிதமான மூங்கில் மரங்கள் நிரம்பிய மூங்கில் பூங்கா, பலவிதமான பட்டாம் பூச்சிகள் ஓடியாடும் பட்டாம்பூச்சிப் பூங்கா என 10 வகையான  சிறுபூங்காக்கள் செம்மொழிப் பூங்காவில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், செம்மொழி பூங்காவில் நாளை பிப்ரவரி 10ம் தேதி மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளதாக செம்மொழி பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மலர் கண்காட்சியை முன்னிட்டு பல வகையான மலர்கள் செம்மொழி பூங்காவில் பூத்துக் குலுங்கி, ஊட்டி, கொடைக்கானல் சென்று வந்த அனுபவத்தைத் தர காத்திருக்கின்றன. காதலர்கள் தின வாரத்தில் செம்மொழி பூங்கா விதவிதமான ரோஜாக்களுடன் பூத்துக் குலுங்கி காத்திருக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web