26 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில்! சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 
ஊட்டி

 

நீலகிரி மாவட்டத்தில் 26 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று (நவ.19) மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ooty-Mettupalayam Summer Special Mountain Train Resumes Service | Check Timings | Coimbatore News - News18

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 23-ம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அடர்லி - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 72 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதையடுத்து, கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண், மரங்கள் அகற்றப்பட்டன. உருண்டு விழுந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் மாற்றப்பட்டன.

ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 26 நாட்களுக்குப் பிறகு இன்று ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்தனர்.