நீலகிரியில் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மலை ரயில் ரத்து!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் இன்று முழுதாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக உதகை, கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் உதகை, கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த மூன்று தாலுக்காகக்ளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கனமழை காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
