“3 ஃபைலையும் சீக்கிரம் ஓபன் பண்ணுங்க”.. விஜய் முன் மாணவி அரசியல் பேச்சு!

 
கல்வி விருதுவிழா உதவித்தொகை விஜய்

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தவெக இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழாவில், முதல்வர் விஜய் முன்னிலையில் கல்லூரி மாணவி ஒருவர் 3 கோப்புகள் குறித்து அரசியல் பேசியிருப்பது அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.  கடந்த விழாவில் மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை எனக் கூறிய விஜய், இம்முறை ஊழல் குறித்து நேரடியாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு மண்டல மாணவ-மாணவிகளுக்காக நடைபெற்ற 2-ஆம் கட்டக் கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, “உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் ஊழலைப் பார்த்துவிட்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? நான் அரசியலுக்கு வந்ததே உங்களுக்காகத்தான்” என்று பேசினார்.

மகிழ்ச்சி விஜய் முதல்வர்

“எனக்கு முன் வைத்துள்ள 3 ஃபைல்ஸ் பற்றி கூறினேன். திறந்து தான் பாருங்கள் என்று கூறுகின்றனர். அறிவுலகமா? ஊழல் உலகமா? என்று தெரியவில்லை. பள்ளிகளின் பாதுகாப்பில் கூட ஊழல் செய்வதா?” என அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் விழாவில் பேசிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், “3 ஃபைல்ஸ் ஓபன் பண்றேன்னு சொன்னீங்க, சீக்கிரம் ஓபன் பண்ணுங்க; அதைப் பார்க்க நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்று குறிப்பிட்டார்.

விஜய் ஆலோசனை மகிழ்ச்சி

கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்ற கல்வி விருது விழாவில், “நான் முதல்வராக வரவில்லை, அண்ணனாக வந்துள்ளேன்; மாணவர்களாகிய உங்களுக்கு இப்போதைக்கு அரசியல் தேவையில்லை” என விஜய் அறிவுரை கூறியிருந்தார். ஆனால், இம்முறை மேடையில் ஊழல் குறித்துப் பேசியதும், அதனைத் தொடர்ந்து மாணவி அரசியல் ரீதியாகப் பேசியதும் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. மாணவர்கள் பங்கேற்கும் கல்வி விழாக்களில் அரசியல் பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும், விஜய் கூடுதல் கவனத்துடன் உரையாற்ற வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளன.