"வாய் திறவுங்கள் CM" சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜுடன் திமுகவினர் வருகை!

 
திமுக திமுக

தமிழகத்தில் தவெக அரசு புதியதாகப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, பிரதான எதிர்க்கட்சியான திமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் "வாய் திறங்கள் சிஎம்" என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ்களைத் தங்களது சட்டைகளில் அணிந்து கொண்டு வந்து அவையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள், அவைக்குள் நுழையும் போது கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தவெக தனது தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகள், குறிப்பாகப் பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவிப்புகள் எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்பது குறித்து இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சரிடம் இருந்து நேரடிப் பதிலை எதிர்பார்க்கப் போவதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச்

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டி, இந்த "வாய் திறங்கள் சிஎம்" போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள இந்த முதல் கூட்டத்தொடரில், புதிய அரசின் கொள்கை முடிவுகள் வாசிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்குப் போட்டியாக எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அமர்ந்திருப்பது அவைக்குள் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.