இடைத்தேர்தலில் தனித்தனியாக களமிறங்கும் எதிர்க்கட்சிகளால் தவெகவிற்கு அதிகரிக்கும் பலம்!

 
கூட்டணி

வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணி

அதிமுக தரப்பில் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், முன்பு அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியும் (நாதக) இதற்கான வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கத் தயாராகி வருகிறது.

இந்தத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவதால், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகக் களமிறங்குவது தவெகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.