பட்ஜெட் 2025.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... நிறுத்தாமல் பட்ஜெட் உரையை வாசித்து வரும் நிர்மலா சீதாராமன்!

 
பட்ஜெட்

நிர்மலா சீதாராமன் 2025 - 26 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்ததால் எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பட்ஜெட்


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர்  உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13 ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார்.  மத்திய பட்ஜெட்டை 8 வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  இந்நிலையில்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்மலா சீதாராமன்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். கடும் அமளிக்கு நடுவே பட்ஜெட்டை உரையை நிர்மலா வாசிக்கத் தொடங்கியுள்ளார். உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருவதால் எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web