ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு... வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கூடுதல் அவகாசம் தராமல் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரியில் நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆழ்வார்திருநகரியில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆழ்வார்திருநகரியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!