நெருங்குது தேர்தல்... 3 தொகுதிகள் வேண்டும்... இரட்டை இலையையும் முடக்கணும்... கறார் காட்டும் ஓபிஎஸ்!

 
ஓபிஎஸ்

பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலும், தேர்தலில் சீட் கேட்டு 600 பேர் வரை விருப்ப மனு கொடுத்திருப்பதும் அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு வரை, பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷான் ரெட்டி, வி.கே சிங், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓபிஎஸ்

இவர்களுடன் ஓபிஎஸ்., வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்,கு.ப கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் "எங்கள் பிரச்சனைகளையும், விருப்பங்களையும் தெரிவித்துள்ளோம். மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சொல்வதாக தெரிவித்துள்ளனர். முதன் முதலில் எங்கள் கட்சியுடன் தான் பேசி உள்ளார்கள்" என்றார். 

ஓபிஎஸ்


நேற்றைய பேச்சுவார்த்தையின் போது, பாஜவுடனான கூட்டணியில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

From around the web