’ஃபெஞ்சால்’ புயல் நாளையே கரையை கடக்கும்.... 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

 
ஃபெஞ்சால் ஃபெஞ்சால்


 
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்  “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி  புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.


இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை புயலாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய  வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதர்மேன்


அதே நேரத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.