"கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்!" - இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மாவட்ட வாரியாக ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!! மாவட்ட வாரியாக ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!!

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில், வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளத் தவெக அரசு 3 இடங்களில் ரேடார் அமைத்து 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் 8 முக்கிய மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைத் தொடக்கம் காரணமாகத் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலைக்குள் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொங்கு மண்டலமான நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

இந்த மழைப் பொழிவில், குறிப்பாகக் கடலோர மற்றும் எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரிக்கு வானிலை மையம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மழை கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 'மிகக் கனமழை' பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டத்திற்குத் தற்போது 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.