9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

 
ஆரஞ்சு அலர்ட்

இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இதனால் பல பகுதிகள், முக்கிய சாலைகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கரையோரங்களில் வசிப்பவர்கள்  பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பலசாலைகள் நீரில் மூழ்கிவிட்டன.   தொடர் மழையால் இதுவரை  188 பேர் உயிரிழந்தனர். 194 பேர் காயமடைந்தனர். 652 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர, 6500 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆரஞ்சு

சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் தொடர் மழைப்பொழிவு இருக்கும். கடந்த 100 ஆண்டு பதிவுகளை பார்க்கும்போது, நடப்பு ஆண்டில் அதிக மழைப்பொழிவு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!