இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
மழை விடுமுறை

இன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று ராஜ ராஜ சோழனின் சதய விழாவினை  முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் கந்தூரி விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மழை விடுமுறை

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.