தமிழகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் ஆரஞ்சு மஞ்சள் அலெர்ட்.... வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

 
மஞ்சள்

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.  இந்த மழை மேலும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரஞ்சு

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்றும், நாளையும் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் கனமழை பெய்யலாம் எனவும்  7 - 11 செமீ அளவுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

மழை
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14, 15 இரு நாட்களிலும்  ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த இரு நாட்களிலும் 12 - 20 செமீ மழை பெய்யக்கூடும் எனவும்  அந்த நாட்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா