உஷார்... உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்துக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

 
ஆரஞ்சு
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக் கூடும் என்றும், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இது ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக தெற்கு வங்கக் கடலில் நிலவி வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆனால், தற்போதைக்கு இது புயலாக மாறுமா என்பது குறித்த எந்தத் தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.

ஆரஞ்சு

அதே வேளையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நெருங்கி வர வர, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் நகர்வைப் பொறுத்து கனமழை பெய்யும் இடங்கள் மாறுபடலாம் என்றும், உள்ளூர் மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!