இன்று சென்னையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிப்பு - பத்திரமா இருங்க மக்களே!

 
ஆரஞ்சு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களில் வடகடலோர தமிழகம் மற்றும் கடல் பகுதிகளில் அடர்ந்த மேகக் கூட்டங்கள் சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெப்பச் சலன மேகங்கள் உருவாகியுள்ளதன் காரணமாக, சென்னைக்கு இன்று அக்டோபர் 18ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய நாளிலும் உஷார் நிலையில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.