தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி !

 
ஆசிரியர்கள்


 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளி மாணவிகள் வகுப்பறையில் ஒரு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகியது. வேலூரில் எடுத்த இந்த வீடியோ தமிழகம் முழுவதும்  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆசிரியர்கள்

அதன் பிறகு சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து போலியாக கணக்கு காட்டியதும் தெரியவந்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள்

அதன் பிறகு மாணவர்களின் வருகை குறித்து ஆசிரியர்கள் முறையாக கணக்கீடு செய்வதோடு ஒருவேளை மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  மதிய உணவு வேளையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனவும் மாணவர்களின் வருகை பதிவேடு குறித்த தகவல்கள் அனைத்தும்  சரியான முறையில் வைக்கப்பட  வேண்டும் எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web