அமெரிக்காவில் நடுவானில் மோதிய 2 ஹெலிகாப்டர்கள்: விமானி உட்பட 3 பேர் பலி... பகீர் வீடியோ!

 
விபத்து

 

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டு கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகான் மாகாணம் மெக்மின்வில் விமான நிலையப் பகுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் பறந்துகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டும் நடுவானில் மோதிக்கொண்டன. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்கள் அருகிலிருந்த விவசாயப் பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கின.

இந்த விபத்தில் விமானி டைலர், பயிற்றுவிப்பாளர் மேடி ஆஸ்போ மற்றும் பயிற்சி விமானி என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் ஹெலிகாப்டர்களின் பாகங்கள் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விமானப் பயிற்சி நடைபெறும் பகுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் மூன்று உயிர்கள் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.