பிறந்தநாள் பரிசாகத் துப்பாக்கி கொடுத்த தாய்! பள்ளியில் 4 பேரைச் சுட்டுக் கொன்ற 16 வயது மகன்
அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில், 16 வயது மகனுக்குப் பிறந்தநாள் பரிசாகத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மகன் பள்ளிக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள், ஒரு ஆசிரியை என 4 பேர் உயிரிழந்தனர்.
பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளியில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. கிரிஃபின் ஜே. ஜான் II என்ற 16 வயது சிறுவன், தனது தாயார் ஷான்டாய் நிக்கர்சன் வாங்கிய துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கி 2026 ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்டு, பொழுதுபோக்குக்காக மகனுக்கு வழங்கப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்தனர். தாக்குதலைத் தடுக்க முயன்ற ஆசிரியை மற்றும் அங்கிருந்த ஒருவரின் தலையீட்டால் கூடுதல் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
