தேர்தலைத் திருவிழா போல நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்... தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேச்சு!

 
ராஜீவ்குமார்

இன்னும் சில நிமிடங்களில் மக்களவைத் தேர்தல் நடைப்பெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம், செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்று வரும் நிலையில், தேர்தலைத் திருவிழா போல நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார். 
தேர்தல் குழு முழுமையடைந்துள்ளதாகவும், எங்கள் வேலையும் முழுமையடைந்துள்ளது.  இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்றும், ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ராஜீவ்குமார்
நாட்டின் 17 வது மக்களவை வருகிற ஜூன் மாதம் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்று வருகிறது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.  

18 - 19 வயதுள்ள பெண் வாக்காளர்கள் 85.3 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் 

10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் 

1.5 கோடி பணியாளர்கள்

55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் பணம் கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web