தவெகவுக்கு தான் எங்கள் முழு ஆதரவு... பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்!

 
பிராமணர் சங்கம்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்முறையாக ஒரு சமுதாய அமைப்பு நேரடியாகத் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வரவிருக்கும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தவெகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். முற்பட்டோர் நலவாரியம் அமைக்க வேண்டும். இந்து கோயில்களை நிர்வகிக்கத் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்; அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டு வரும் தலைவர் விஜயின் தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் செயல்பட மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மதச்சார்பின்மை பேசும் அரசு பிற மத வழிபாட்டுத் தலங்களைப் போல இந்து கோயில்களுக்கும் தனி வாரியம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பிராமணர் சங்கம் முன்வைத்துள்ளது.