தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1 லட்சம் போலீசார் குவிப்பு - சென்னையில் மட்டும் 20,000 பேர் பாதுகாப்பு!

 
போலீசார் காவல்துறை காவல் காவலர் போலீசார் காவல்துறை காவல் காவலர்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் தீர்ப்பு மே 4-ஆம் தேதி காலை வெளியாகவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அமைதியைப் பேணவும், வாக்கு எண்ணிக்கை மையங்களைப் பாதுகாக்கவும் ஒரு லட்சம் போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதற்றமான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை துணை ராணுவப் படையினரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

144 பாதுகாப்பு தடை உத்தரவு ஊரடங்கு

ஒவ்வொரு மையத்திலும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அலுவலகங்களில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மட்டும் சுமார் 20,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாகத் தவெக, திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் மோதல்களைத் தவிர்க்கக் கூடுதல் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகரம் முழுவதும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தேர்தல்

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடி வழக்குப் பதிவு செய்ய அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.