தட்கல் டிக்கெட் முறைகேடு - 65 ரயில்வே ஊழியர்கள் உட்பட 13,000க்கும் மேற்பட்டோர் கைது!

 
ரயில்வே அமைச்ச்

ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 65 ரயில்வே ஊழியர்கள் மற்றும் 13,580 டிக்கெட் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இனி தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்...  ரயில்வே அமைச்சர் முக்கிய தகவல்!  

2023-ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. சட்டவிரோதச் மென்பொருள்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது ரயில்வே சட்டம் 1989-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தட்கல் முறையில் சாமானிய மக்களுக்கு முறையான டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதிசெய்யவும், இடைத்தரகர்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் இணைய வழிகளில் தொடர் கண்காணிப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.