சென்னையில் 'சிங்கப்பெண்' மாரத்தான் - 3,000 பெண்கள் பங்கேற்பு!

 
பெண்கள் மாரத்தான் புற்றுநோய்

சென்னையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட 'சிங்கப்பெண் மாரத்தான்' போட்டியில் சுமார் 3,000 பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சென்னை மத்திய மாவட்ட ரோட்டரி கிளப், இன்னர்வீல் கிளப்புகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் 'சிங்கப்பெண் சிறப்புப் படை' ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தின.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்!!

சிங்கப்பெண் சிறப்புப் படை ஐ.ஜி. பவானீஸ்வரி ஒலிம்பிக் தீபம் வழங்கி, போட்டியைத் தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் தொடங்கும் இந்த ஓட்டமானது காமராஜர் சாலை வழியாகக் கலங்கரை விளக்கம் மற்றும் கண்ணகி சிலை வரை சென்று மீண்டும் தீவுத்திடலை வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெண்களுக்கான பாதுகாப்பு உதவி எண் '1091' குறித்தும் சிங்கப்பெண் சிறப்புப் படையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எச்பிவி  தடுப்பூசி: 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் எச்பிவி தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்த நிகழ்வில் நிபுணர்களால் வலியுறுத்தப்பட்டது.