போலீஸ் வாகனத்தை முந்திச் சென்றதால் விபரீதம்.. ஆத்திரத்தில் இளைஞரை நிர்வாணமாக தாக்கிய கொடூரம்!

 
போலீஸ் கஸ்டடி

மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவை சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் போலீஸ் மற்றும் மின்சாரத் துறையினரின் வாகனங்களை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ்

இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய போலீசார், தாறுமாறாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டி, துஷ்பிரயோகம் செய்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதுமட்டுமல்லாமல், ரோஹித் வால்மீகியை போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணம் செய்து தாக்கினர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரோஹித், வீட்டிற்கு வந்த பிறகு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றினர்.

தன்னை தாக்கிய போலீசார் மீது கடந்த 20ம் தேதி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சத்தர்பூர் போலீஸ் சூப்பிரண்டு அகம் ஜெயின் கூறுகையில், “விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள்களை காவல் நிலையத்தில் இருந்து நீக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web