தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் பிளாண்ட்! நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ் !

தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் பிளாண்ட்! நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ் !

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 வரை தளர்வில்லாத ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. பரவலின் அடிப்படையில் மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து பலநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் பிளாண்ட்! நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ் !

அந்த வகையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில் தஞ்சை மருத்துவமனைக்கு துபாய் தொழிலதிபர் ஆதரவுக்கரம் நீட்டினார். அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது

தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் பிளாண்ட்! நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ் !

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் எஹியா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்துள்ளார்.
தொழில் அதிபர் எஹியாவின் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் நடுகடை . இதனால் ‘தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்த நேரத்தில் சொந்த மாவட்டத்திற்கே உதவும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

From around the web