"கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை" - பெ.சண்முகம் கண்டனம்!

 
சண்முகம் கம்யூனிஸ்ட்

கர்நாடக வனப் பகுதிக்குள் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பேர் கர்நாடக எல்லைக்குட்பட்ட வனப் பகுதிக்குள் தங்களின் மாடுகளைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தாங்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்காக, உயிரிழந்தவர்கள் வனப் பகுதிக்குள் வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக வனத்துறை முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகப் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டுத் தனது வலுவான கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கொடூரச் சம்பவத்திற்குக் காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.