பா.ரஞ்சித்தின் தங்கலான்.. நெகிழ்ச்சியுடன் மனம் திறந்த நடிகை பார்வதி !!

 
பார்வதி

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பார்வதி தமிழில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார்.

பார்வதி

பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி, தமிழில் குறைவான படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது படத்துக்கு எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 

இந்த நிலையில், தங்கலான் படம் குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசியுள்ளார். அப்போது, நான் நடிகையாக நடிக்க இதுவரை கஷ்டப்பட்டதில்லை. ஆனால், தங்கலான் படத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பில் சில இடங்கள் மிகவும் பாராட்டும்படியாக இருந்தது. பழங்காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

பார்வதி

இதை தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நிச்சயமாக பெரிய விருந்தாக இருக்கும், என்றார். இதனால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே தங்கலான் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

From around the web