பகீர்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை..!!

 
குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தற்கொலை

குஜராத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவருபவர் மணிஷ் சோலன்கி. பர்னிச்சர் வியாபாரியான இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சோலன்கி தனது மூன்று குழந்தைகள் உள்பட ஆறு பேருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவர்கள் மனைவி ரீட்டா, தந்தை கானு, தாய் ஷோபா மற்றும் மூன்று குழந்தைகளான திஷா, காவ்யா மற்றும் குஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Surat : 7 Family Members Including 3 Toddlers Commit Mass Suicide - The  Blunt Times

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அறையில் தற்கொலை குறிப்பு கடிதம் போலீஸாருக்கு கிடைத்தது. அதில் எங்கள் தற்கொலைக்கு நிதி நெருக்கடியே காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. மரச்சாமான்கள் கடையில் பணியாற்றிவரும் ஒருவர் சோலன்கியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்காத நிலையில், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகம் எழுந்த அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

Gujarat Surat News: तीन बच्चों सहित एक ही परिवार के 7 लोगों ने की आत्महत्या  - Hindi Samachar : Latest News in Hindi, Breaking News in Hindi

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன? என்பதை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web