இறுதிச் சடங்கில் சிலிர்த்து எழுந்த குழந்தை. 8 மணி நேரத்திற்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்.!!

 
இறந்த குழந்தை உயிருடன் வந்த நிகழ்வு
குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்த 8 மணி நேரத்தில் குழந்தை உயிருடன் வந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தியை ரத்தன் தாஸ் (29), செவ்வாய்க்கிழமை மாலை தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவியை சில்சாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர்கள் கர்ப்பத்தில் சிரமங்கள் இருப்பதாகவும், அவர்கள் தாயையோ அல்லது குழந்தையையோ காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தை இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, குழந்தையை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை அழத் தொடங்கியது, உடனே குழந்தை மருத்துவமனைக்கு எடுத்து உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


Silchar Medical College and Hospital - Wikipedia
இதுக்குறித்து குழந்தையின் தந்தை ரத்தன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியது. "நாங்கள் எனது மனைவிக்கு மருத்துவர்களை பிரசவம் செய்ய அனுமதித்தோம், என் மனைவி இறந்த குழந்தையைப் பெற்றெடுத்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள். புதன்கிழமை காலை இறப்புச் சான்றிதழுடன் இறந்த உடலைப் பெற்றோம்.இறந்த உடல் ஒரு பாக்கெட்டில் கொடுக்கப்பட்டது. “சில்சார் சுடுகாட்டை அடைந்த பிறகு, தகனம் செய்வதற்கு முன்பு நாங்கள் பாக்கெட்டைத் திறந்தபோது, ​​என் குழந்தை அழுதது. நாங்கள் குழந்தையுடன் மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தோம், இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார், என்று கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சில்சாரின் மாலினிபில் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தத் திரண்டனர்.இது குறித்து உள்ளூர்வாசியான சுஜித் தாஸ் சவுத்ரி கூறுகையில், பிறந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று கூட சரியாக ஆய்வு செய்யாமல், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக குப்பை போன்ற ஒரு பொட்டலத்திற்குள் குழந்தையை மருத்துவமனை அதிகாரிகள் வைத்துள்ளனர்.மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

From around the web